
பிரேஸிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், வழக்கமான உலகத் தலைவர்கள் எடுத்துக்கொள்ளும் குழுப் புகைப்படத்துக்காக ஜோ பைடன் வந்தபோதுதான், அவருக்குத் தெரிந்தது, ஏற்கனவே அவர் இல்லாமலே புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது என்று.
அமெரிக்க அதிபராக தான் பங்கேற்கும் கடைசி ஜி 20 மாநாட்டில் வரலாற்றில் இடம்பெறக்கூடிய குழுப் புகைப்படத்தில் இடம்பெறத் தவறிவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இதையும் படிக்க.. மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
சில நடைமுறைச் சிக்கல்களால், குழுப் புகைப்படத்தில் இடம்பெற ஜோ பைடன் தவறிவிட்டதாக அதிருப்தியடைந்த அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குழுப் படத்தில் இடம்பெறத் தவறியது இவர் மட்டுமல்ல, கனடா மற்றம் இத்தாலிய பிரதமர்களும்தான்.
பாரிஸின் ரியோ ஜெனிரியோவில் உள்ள நவீன கால கலை அருங்காட்சியகத்தின் பின்னணியில் குழுப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர், பிரெஞ்ச் அதிபர் என பல உலகத் தலைவர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு குழு புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தனர்.
குழுப் புகைப்படம் எடுக்க அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்திருந்த தலைவர்கள் பலரும் தங்களுக்குள் நகைச்சுவையாகப் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபரும், கனடா பிரதமரும் ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குழுப் புகைப்படம் எடுக்கும் இடத்துக்கு வந்துகொண்டிருந்தபோதே, புகைப்படம் எடுக்கும் பணி முடிந்து தலைவர்கள் பலரும் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர் என்பதை அறிந்தனர்.
சில நடைமுறைச் சிக்கல்களால், அனைத்துத்தலைவர்களும் வருவதற்குள் புகைப்படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதில் பல தலைவர்கள் இடம்பெறவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.