ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் அனுமதித்திருப்பது பற்றி...

News image

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

Updated On :19 நவம்பர் 2024, 3:51 pm IST

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷியப் படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் அனுமதி அளித்துள்ளார்.

நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்ததற்கு ரஷிய அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.

எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரஷியாவின் புதுப்பிக்கப்பட்ட கொள்கையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட அணு ஆயுத கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தங்களின் ராணுவ ஆதரவை விரிவுபடுத்தியுள்ளதால், தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வழங்கிய தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு வாஷிங்டன் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொள்கையில் தேவையான அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாகவும், சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ரஷியாவின் பாதுகாப்புத் துறையின் உயர்நிலைக் கூட்டத்தில் அணு ஆயுத கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.

முக்கிய திருத்தங்கள்

ரஷியா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷியா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா அனுமதி

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷியப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையை தாண்டி ரஷியா மீது தாக்குதல் நடத்த அனுமதிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஆயுதங்களை உக்ரைனுக்கு வெளியே ரஷியா எல்லைக்குள் தாக்குதல் நடத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை அனுமதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.