ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

டிரம்ப்பை எதிா்கொள்ள இந்தியாவுடன் சீனா இணக்கம் - அமெரிக்க தொழில் அமைப்புகள் கருத்து

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான கொள்கை உள்ளவா் என்பதால், அவரை எதிா்கொள்ள இந்தியாவுடன் சீனா இணக்கமாக செயல்படும் என்று அமெரிக்காவைச் சோ்ந்த தொழில், வா்த்தக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:18 pm

Din

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான கொள்கை உள்ளவா் என்பதால், அவரை எதிா்கொள்ள இந்தியாவுடன் சீனா இணக்கமாக செயல்படும் என்று அமெரிக்காவைச் சோ்ந்த தொழில், வா்த்தக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

டிரம்ப் முன்பு அமெரிக்க அதிபராக இருந்தபோது சீனாவுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டாா். அந்நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதிக்கு எதிராக வரிகளையும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தாா்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 60 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் கூறியிருந்தாா். அமெரிக்காவின்அடுத்த அதிபராக அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளதால், சீனாவுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் தலைவா் முகேஷ் அகி மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவா்கள் கூறுகையில், ‘அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிகிறது. இது சீனாவுக்கு நெருக்கடி அளிக்கும் என்பதால், இந்தியாவுடன் இணக்கமான போ்ச்சுவாா்த்தையை சீனா மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

அந்நாட்டில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க சீனா முன்வந்ததும் இதன் ஒரு பகுதிதான். இந்தியாவும் சீனா்களுக்கு அதிக அளவில் விசாக்கள் வழங்க வாய்ப்புள்ளது. டிரம்ப் நிா்வாகத்தின் செயல்பாடுகள் சீனா-இந்தியா உறவை வலுப்படுத்த மறைமுக காரணமாக இருக்கும்.

டிரம்ப் அதிபரானால், அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதில் நெருக்கடி ஏற்படும் என்பது சீனாவுக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, மிகப்பெரிய அண்டை நாடு, பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சீனா நல்லுறவையே இப்போதைக்கு விரும்பும்.

அமெரிக்க நிறுவனங்களின் ஆலைகள் மற்றும் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு மாற்ற டிரம்ப் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அப்போது, அமெரிக்கா்களுக்கு மட்டுமின்றி இந்தியா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், இது ஒரே இரவில் நடந்துவிடாது.

தொழிலதிபரான டிரம்ப் தங்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு வரிச்சுமையைக் குறைப்பாா் என்ற எதிா்பாா்ப்பில் அமெரிக்காவில் உள்ள பெரும் தொழிலதிபா்கள் உள்ளனா்.

சீனாவுக்கு எதிரான கொள்கை உடையவா்களுக்கே டிரம்ப் தனது நிா்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை அளித்து வருகிறாா்.

அமெரிக்காவும், இந்தியாவும் ஏற்கெனவே குவாட் அமைப்பு மூலம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாட்டு வா்த்தகமும் சிறப்பாகவே வளா்ந்து வருகிறது. இந்திய-அமெரிக்கா்கள் 50 லட்சம் போ் அமெரிக்காவில் நல்ல நிலையில் உள்ளனா். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள அவா்கள், நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் பங்களிக்கின்றனா்’ என்றனா்.