திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஸா மீதான போருக்காக இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய ஆணை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணை

News image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்) - AP

Updated On :21 நவம்பர் 2024, 6:14 pm IST

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காஸாவில் போர்க் குற்றங்களைத் தூண்டியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேல்ண்ட் இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலும், அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை, பிரதமர் நெதன்யாகுவும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களும் `அவமானகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.