ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 50 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:06 pm

Din

பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டம் வழியாக சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா்.

அந்த வாகனங்கள் பாரசினாா் நகரிலிருந்து பெஷாவரை நோக்கி அணியாகச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், எட்டு பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலனவா்கள் ஷியா முஸ்லிம் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் கூறினா்.

தாக்குதலுக்குள்ளான வாகன அணிவகுப்பில் 200 வாகனங்கள் இருந்ததாகவும், சம்பவப் பகுதி தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி எனவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.