டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஐஸ்லாந்தில் ஒரு வருடத்தில் 7-வது முறை வெடித்த எரிமலை!

எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லை..

News image

எரிமலை வெடிப்பு

Updated On :21 நவம்பர் 2024, 4:13 pm IST

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்றிரவு வெடித்துச் சிதறியுள்ளது.

ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

எரிமலையானது நேற்று மாலை வெடிக்கத் தொடங்கி நிலையில் தொடர்ந்து இரவு 11.14 மணிக்கு சுமார் 3 கி.மீ (1.8 மைல்) நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட இது கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இருப்பினும் கிரிண்டாவிக் நகரம் உள்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை

தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கி.மீ(30 மைல்) தொலைவில் வசிக்கும் சுமார் 3,800 மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய ஒருவருடத்திற்குள் ஐஸ்லாந்தில் ஏழாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக்கின் மேலே அமைந்திருக்கும் ஐஸ்லாந்து சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கிறது. முன்னதாக கடந்த 2010ல் எரிமலை வெடித்ததில், பல மாதங்களுக்கு விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.