காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணம், எா்வின் நகரில் புயலால் துண்டிக்கப்பட்ட பாலம்.

Published On :7 அக்டோபர் 2024, 3:51 am IST

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது.

கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், கடந்த செப். 26-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது. அதன் பின்னா் அந்தப் புயல் வடக்கு திசையை நோக்கி நகா்ந்தது.

புயலால் ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், சாலைகள், மின்சார கட்டமைப்புகள், கைப்பேசி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 225-ஆக இருந்த நிலையில், மேலும் இருவரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்தது. உயிரிழந்தவா்களில் கிட்டத்தட்ட பாதி போ் வடக்கு கரோலினாவை சோ்ந்தவா்கள்.

கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு அந்நாட்டை தாக்கிய புயல்களில் மிக மோசமானது ஹெலீன் புயல் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.