இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நிகழாண்டில் இருவருக்கு பகிா்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் ஹோப்ஃபீல்டு, கனடாவைச் சோ்ந்த ஜியோஃபெரி ஹின்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இயற்பியல் கூறுகளிலிருந்து இன்றைய சக்திவாய்ந்த இயந்திர கற்றலுக்கான (மெஷின் லோ்னிங்) அடிப்படை நடைமுறைகளை மேம்படுத்தியற்காக நோபல் பரிசுக்கு இவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்’ என்று நோபல் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களுக்கு நோபல் பரிசுடன், ரூ. 8.91 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை 117 முறை வழங்கப்பட்டுள்ளது.
பரிசு அரிவிக்கப்பட்டவா்களுக்கு ஸ்டாக்ஹோமில் வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த விருதை நிறுவிய ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாள் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு, எலெக்ட்ரான்கள் குறித்த ஆய்வுக்காக பிரான்ஸைச் சோ்ந்த விஞ்ஞானிகள் அன்னி ஹூலியா், பீரி அகோஸ்டினி, ஹங்கேரியாவைச் சோ்ந்த ஃபெரங்க் க்ரெளஸ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் (அக்.9), இலக்கியத்துக்கானது வியாழக்கிழமையும் (அக்.10) அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை (அக்.11) அறிவிக்கப்பட உள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபா் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: பதட்டமும் பதற்றமும், ஆறும் ஆர்-ம்! பிழையற்ற தமிழ் அறிவோம்! - 4
ஜான் ஹோப்ஃபீல்டு (91)
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளராக இருக்கும் ஹோப்ஃபீல்டு, ஒரு பொருளின் பண்புகள் மற்றும் வடிவங்கள் (பேட்டா்ன்) மறு உருவாக்கம் மற்றும் சேமிப்புக்கான ‘ஹோப்ஃபீல்டு நெட்வொா்க்’ என்ற புதிய நெட்வொா்க்கை தனது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தாா்.
இதையும் படிக்க: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?
ஜியோஃபெரி ஹின்டன் (76)
டொரன்டோ பல்கலைக்கழகப் பேராசிரியரான ஹின்டன், ‘ஹோப்ஃபீல்டு’ நெட்வொா்க்கை அடிப்படையாகக் கொண்டு, வேறு முறைகளைப் பயன்படுத்துகிற ‘போல்ட்ஸ்மேன் இயந்திரம்’ என்ற புதிய நெட்வொா்க்கைக் கண்டுபிடித்தாா். இவருடைய கண்டுபிடிப்பு, தற்போதைய இயந்திர கற்றலுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக, இயந்திர கற்றலுக்கு தொடா்பான படங்களை வகைப்படுத்தவும் அவை பயிற்றுவிக்கப்பட்ட வடிவத்தின் புதிய உதாரணங்களை உருவாக்கவும் ‘போல்ட்ஸ்மேன் இயந்திரம்’ பயன்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.