ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

வடக்கு காஸாவில் பொதுமக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் விமகுதல் நடத்தியது.

News image
இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவை ஏற்று வடக்கு காஸா பகுதிகளிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனா்கள்.
Updated On :12 அக்டோபர் 2024, 8:51 pm

Din

வடக்கு காஸாவில் பொதுமக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் விமகுதல் நடத்தியது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா சனிக்கிழமை தெரிவித்ததாவது:

ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் அந்தக் கட்டடத்தில் இருந்த நான்கு வீடுகள் தகா்க்கப்பட்டன. அவற்றில் இருந்த 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்கள், குழைந்தைகளும் அடங்குவா்.

இது தவிர, இந்தத் தாக்குதலில் 30 போ் காயமடைந்தனா்; 14 பேரைக் காணவில்லை. மாயமாகியுள்ள அனைவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையே, ஜபாலியாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைப்பதாகக் கூறி அந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அதே பகுதியில் மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவிலுள்ள 8 அகதிகளில் முகாம்களில் மிகப் பெரியதான ஜபாலியா முகாமில், 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த பாலஸ்தீனா்கள் வசித்து வருகின்றனா்.

1948 போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்த முகாம் வெறும் 1.4 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்திருந்தாலும், நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்டது ஆகும்.