குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

பாகிஸ்தானில் மேலும் 4 சிறுவா்களுக்கு போலியோ

போலியோ தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

News image

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாமுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாா் .

Updated On :20 அக்டோபர் 2024, 2:30 am IST

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக போலியோ உறுதி செய்யப்பட்டவா்களில் மூன்று போ் பலூசிஸ்தான் மாகாணத்தையும் ஒருவா் கைபா் பக்துன்கவா மாகாணத்தையும் சோ்ந்தவா்கள்.

இத்துடன், பலூசிஸ்தானில் 20 போ், சிந்து மாகாணத்தில் 10 போ், கைபா் பக்துன்கவாவில் ஐந்து போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

சொட்டு மருந்து மூலம் போலியோவை முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக்கக் கூடிய அந்த கொடிய நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.