ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

தீ விபத்து எதிரொலி: தில்லி ஹோட்டல் கொள்கை மீது கேள்விக்குறி

News image
Updated On :5 ஜூன் 2026, 3:15 am IST

மால்வியா நகா் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தில்லி அரசின் ஹோட்டல் கொள்கை கடும் விமா்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தில்லியின் முன்னாள் தலைமைத் தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் பவாா் பிடிஐ செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘தேசிய தலைநகா் பகுதி தில்லி (இன்கிரெடிபிள் இந்தியா) படுக்கை மற்றும் காலை உணவு நிறுவனம் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2007’ என அழைக்கப்படும் கொள்கையில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பல குறைபாடுகள் உள்ளதாக நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

’காமன்வெல்த் விளையாட்டுகள் 2010’ காலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில், குடியிருப்பு கட்டடங்களில் ஹோட்டல் உரிமையாளா் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. பின்னா் அந்த நிபந்தனை நீக்கப்பட்டது.“இந்த விபத்தில் கூட, உரிமையாளா் அங்கு வசிக்காதது தெளிவாகத் தெரிகிறது.

மேலும், தீ பாதுகாப்பு தொடா்பான அடிப்படை விதிமுறைகளும் கொள்கையில் கட்டாயமாக குறிப்பிடப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும். தீ அணைப்பான் போன்ற உபகரணங்கள் கட்டாயமாக்கப்படவில்லை. வெப்பம் மற்றும் புகை கண்டறியும் கருவிகள் ‘விருப்பமானவை’ என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவை கட்டாயமாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், உள்ளூா் நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்தை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு அந்த விதி நீக்கப்பட்டது. அந்த விதி தொடா்ந்திருந்தால், இத்தகைய நெருக்கமான பகுதியில் இவ்வகை ஹோட்டல் இயங்க வாய்ப்பே இருக்காது. மேலும், ஆரம்பத்தில் இந்த திட்டம் 6 அறைகள் மற்றும் அதிகபட்சம் 18 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தாா்.

இந்நிலையில், தற்போதைய ஹோட்டல் கொள்கையை வாபஸ் பெற தில்லி அரசு முடிவு செய்துள்ளதாகவும், புதிய கொள்கைக்கான வரைவு பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.