இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலியர்கள்
இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலியர்கள்AFP

இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்ரேல் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் இஸ்ரேலைச் சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேலுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது,

''இலங்கையின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் நடக்க வாய்ப்புள்ளது. அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட எல்லையோரப் பகுதியான அறுகம் குடா மற்றும் தெற்கு, மேற்கு கரையோரம் இருக்கும் இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது குறைந்தபட்சம், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் தலைநகர் கொழும்புவுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய மக்கள் இஸ்ரேலைச் சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என இஸ்ரேலின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹீப்ரு மொழி எழுத்துகளுடன் கூடிய டீ-சர்ட் மற்றும் மதம் சார்ந்த தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் செய்ய வேண்டாம் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com