
ஈரான் மீது தாக்குதல் நடத்த இராக் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் அவையிடம் இராக் புகார் அளித்துள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் குழுவிடம் இராக் அரசின் செய்தித் தொடர்பாளர் பாசிம் அல்-அவாடி புகார் அளித்துள்ளார்.
வான்வெளியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறையான்மைக்கு எதிரான இஸ்ரேலின் அத்துமீறல் செயல் இராக் கண்டனம் தெரிவிப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அவையில் இராக் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மற்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தங்கள் வான்வெளியையோ அல்லது நிலத்தையோ பயன்படுத்த இராக் அனுமதிக்காது. குறிப்பாக பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ள அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்த இராக் ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டின் இறையான்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றின் மீதுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பேச்சுவார்த்தை மற்றும் இருதரப்பு புரிதல் மூலம் மோதல்களுக்குத் தீர்வு காண்பதை இராக் ஆதரிக்கிறது என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டது.
இதையும் படிக்க | பத்திரிகையாளர்கள் 5 பேரை கொன்ற இஸ்ரேல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.