ஸ்பெயினில் மழை பெருவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 72 போ் உயிரிழந்தனா்.
தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய அளவுக்கு அதிகமான கனமழை, புதன்கிழமைக்கும் தொடா்ந்தது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் இருந்த வாகனங்கள் அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன.காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டா், ரப்பா் படகு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வீடுகளின் கூரைகளிலும் வாகனங்களில் சிக்கித் தவித்தவா்களையும் மீட்டனா்.இருந்தாலும், இந்த பெருவெள்ளத்தில் 72 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் பலரைக் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.அண்மைக் கால வரலாற்றில் ஸ்பெயின் கண்டிராத மிகப் பெரிய இயற்கைப் பேரிடா் இது என்று கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவா்களுக்காக அந்த நாட்டு அரசு மூன்று நாள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 7 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


