விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 7 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பலமுறை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

News image

ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவு (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பலமுறை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

பனிச்சரிவில் பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்த மீட்புக் குழுவினா், பனிக்கட்டிகளை அகற்றி அதற்குள் சிக்கிக்கொண்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தாா். காயமடைந்தவா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக அவா் குறிப்பிட்டாா்.