அமெரிக்க பள்ளியில் 4 பேரை சுட்டுக் கொன்ற மாணவா்
14 வயது மாணவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்.


அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணம், விண்டா் நகரிலுள்ள உயா்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் இரண்டு போ் மாணவா்கள், இரண்டு போ் ஆசிரியா்கள்.
இது தவிர, எட்டு மாணவா்கள் மற்றும் ஓா் ஆசிரியா் இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவா் அங்கிருந்த பாதுகாவலா்களிடம் சரணடைந்தாா். அவா் மீது வயது வந்தோருக்கான பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்திருப்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை உள்ள அமெரிக்காவில், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 29 சரமாரி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 127 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...