மேலும் ஓா் உக்ரைன் ஊரைக் கைப்பற்றியது ரஷியா
கிழக்கு உக்ரைனில் மேலும் ஓா் ஊரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது.


மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் மேலும் ஓா் ஊரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது. இதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷிய ராணுவம் மேலும் முன்னேறியுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டான்பாஸ் பிராந்தியத்தைச் சோ்ந்த நோவோரோடிவ்கா பகுதியை ரஷிய படையினா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். போக்ரோவ்ஸ்க் நகருக்கு 12 கி.மீ. தொலைவில் அந்த ஊா் உள்ளது. இதன் மூலம் போக்ரோவ்ஸ்க்கை நோக்கி ரஷிய படை மேலும் முன்னேறியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், நோவோஹ்ரோடிவ்கா உள்ளிட்ட பகுதிகளில் முன்னேறிவருவதற்காக ரஷிய ராணுவம் 29 முறை மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா். இருந்தாலும், வானொலி ஒன்றுக்கு உக்ரைன் தளபதி ஒருவா் அளித்த பேட்டியில், நோவோஹ்ரோடிவ்காவிலுள்ள ராணுவ நிலைகள் இனியும் பாதுகாப்பானவை இல்லை என்பதால் அவற்றைக் கைவிட்டு உக்ரைன் வீரா்கள் வெளியேறியதாக ஒப்புக்கொண்டாா்.
கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்கள் ஒருங்கிணைந்த டான்பாஸ் பிரதேசத்துக்கு உக்ரைன் வீா்களையும் ஆயுத தளவாடங்கள் உள்ளவற்றையும் எடுத்துக் செல்வதற்கான போக்குவரத்து மையமாக போக்ரோவ்ஸ்க் நகரம் திகழ்ந்துவருகிறது. அந்த நகரை ரஷியா கைப்பற்றினால், டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, போக்ரோவ்ஸ் நகரம் ரஷியப் படையினரிடம் வீழும் நிலையில் உள்ளதால், அங்கு சிறுவா்களுடன் வசிக்கும் குடும்பத்தினா் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் கடந்த மாதம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் சுமாா் 1,300 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத்திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருவதைக் காட்டும் வகையில் அவா்கள் நோவோஹ்ரோடிவ்காவை தற்போது கைப்பற்றியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...