ஜெர்மனி: இடிந்து ஆற்றில் விழுந்த பாலம்

சாலை, படகு போக்குவரத்து பாதிப்பு
கரோலா பாலம்
கரோலா பாலம்ஏபி
Published on
Updated on
2 min read

ஜெர்மனியில் பாலம் இடிந்து விழுந்ததில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகர மையத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் ஒன்றான கரோலா பாலம், இன்று அதிகாலையில் இடிந்து ஆற்றினுள்ளே விழுந்தது.

மேலும் இந்த சம்பவம், அதிகாலையில் நிகழ்ந்தமையால், பாலத்தில் யாருமில்லாத காரணத்தால், யாரும் காயமடையவில்லை. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும், இந்த விபத்தால், போக்குவரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முழு பாலமும் அவசரமாக மூடப்பட்டதால், நகரில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் டிரெஸ்டனின் ஓல்ட் டவுன் மற்றும் நியூ டவுன் இடையே பயணிக்கின்றனர்.

படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் கப்பல்களும் பாதிப்படைந்துள்ளன.

கூடுதலாக, இரண்டு பெரிய மாவட்டங்களின் குழாய்கள் வெடித்ததால், மாநிலத் தலைநகரான டிரெஸ்டனில் சூடான நீர் வழங்கல் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலத்தைச் சுற்றியுள்ள நெருக்கமான தெருக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இடிந்ததால், மீதமுள்ள இடியும் அபாயம் உள்ளதால், கடுமையான ஆபத்து ஏற்படலாம் என்று தீயணைப்பு படை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் கிளாரே தெரிவித்தார்.

அசல் கரோலா பாலம் 1895 ஆம் ஆண்டில் முதன்முதலில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் நெருங்கி வந்த சோவெட் இராணுவத்தைத் தடுக்க உதவியது.

பாலத்தின் புனரமைப்பு பணிகள் 1967 மற்றும் 1971 ஆண்டுகளுக்கு இடையில் நடந்தது; புதுப்பிப்பு பணிகள் 2019 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்டது.

கரோலா பாலம்
வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com