
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர், சம்பவத்தன்று கோல்ஃப் திடல் அருகே 12 மணிநேரத்தை செலவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள வெஸ்ட் பாம் கடற்கரை அருகே டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர்கள் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
12 மணிநேரம் காத்திருப்பு
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கோல்ஃப் திடல் அருகே சுமார் 12 மணிநேரம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கோல்ஃப் விளையாடச் செல்லும் திடலில் வளர்ந்திருந்த புதருக்குள் ஏகே ரக துப்பாக்கி கிடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி முதல் கோல்ஃப் திடல் அருகே முகாமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்புக்கு கடந்த அதிபர் தேர்தலில் அந்த நபர் வாக்களித்திருந்ததும், இதனையடுத்து அவரின் செயல்பாடுகளால் அந்த நபர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல்பிரசாரத்தில் டிரம்ப் ஈடு பட்டபோது அவர் மீது துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.
தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் பெரும்பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிசார்பில் டிரம்ப் போட்டி யிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.