
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி காரணமாக பட்டியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஜிம்பாப்வே நாடு முழுவதும் வனவிலங்குக் காப்பகங்களில் வசிக்கும் 200 யானைகளைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்திட்டத்தை வகுத்துவருகிறோம்.
கொல்லப்படும் யானைகளின் இறைச்சி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும். நாடு கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள சூழலில், வனவிலங்குக் காப்பகங்களில் யானைகளின் நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
54,000 யானைகள் மட்டுமே வசிப்பதற்கு இட வசதியுள்ள ஜிம்பாப்வேயில் தற்போது 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன என்றாா் அவா்.
ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா ஆகிய ஐந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அந்த வகையில், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யானைகளைக் கொண்டுள்ள பிராந்தியமாக இது திகழ்கிறது.
ஜிம்பாப்வேயின் அண்டை நாடான நமீபியாவிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பதற்காக 83 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு அண்மையில் முடிவெடுத்தது. அதனைப் பின்பற்றியே ஜிம்பாப்வேயும் 200 யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது.
வறட்சி காரணமாக நீா்நிலைகள் வற்றிப் போவதால், வனப் பகுதிகளில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு யானைகள் வருவதும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஜிம்பாப்வேயில் 50 போ் யானை தாக்கி உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.