உலகம்
இந்தோனேசியா: நிலச்சரிவில் 15 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 போ் உயிரிழந்தனா். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்; இன்னும் 25 போ் புதையுண்டுள்ளனா். அவா்களை மீட்புக் குழுவினா் தேடிவருகின்றனா்.
இது தவிர, கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை கிராமமான நகாரி சுங்காய் அபுவிலும் மண்ணில் புதையுண்டிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.