மாற்றுப் பாலினம் சார்ந்த புத்தகங்களை எரிக்கும் காணொலி! : சர்ச்சையில் இளம் வேட்பாளர்

மிசூரியில் இளம் வேட்பாளர் ஒருவர் மாற்றுப் பாலினம் சார்ந்த புத்தகங்களை எரிக்கும் காணொலி வளைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
வாலன்டினா புத்தகங்களை எரிக்கும் காணொலி | X
வாலன்டினா புத்தகங்களை எரிக்கும் காணொலி | X

அமெரிக்காவின் மிசூரி மாநிலச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் 24 வயதான வாலன்டினா கோமஸ், தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் சார்ந்த புத்தகங்களை எரிக்கும் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

தான் பதவிக்கு வந்தால் இது போன்ற புத்தகங்கள் அனைத்தும் தீக்கு இறையாகும் என அவர் பேசுவது அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை குழந்தைகளுக்குக் கற்பிக்கும், குழந்தைகளை பாலுறவுப்படுத்தும் புத்தகங்கள் அனைத்தையும் எரிப்பேன் என இந்தக் காணொலி இடம்பெறும் அவரது வலைதளப்பதிவுகளில் தெரிவித்துள்ளார். 

அந்தக் காணொலியில் அவர் 'குவீர்: தி அல்ட்டிமேட் எல்ஜிபிடி கைடு ப்ஃபார் தி டீன்ஸ்' (Queer: The Ultimate LGBTQ Guide for Teens) மற்றும் நேக்கட்: நாட் யுவர் ஆவரேஜ் செக்ஸ் என்சைக்ளோபீடியா (Naked: Not Your Average Sex Encyclopedia) ஆகிய மாற்று பாலினம் சார்ந்த புத்தகங்களை அவர் எரித்துள்ளார். 

இணைதளத்தில் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று பாலினத்தவர்களை இப்படி வெளிப்படையாக எதிர்க்கிறார் என ஒரு தரப்பு, அவர் குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்டுதான்இப்படி செய்கிறார் எனவும் இரு தரப்புகள் விவாதத்தில் இறங்கியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com