காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயார்: இஸ்ரேல்

சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

News image
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Updated On :3 ஜனவரி 2024, 8:30 am

DIN

சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது.  

சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. 

'அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை அரசியல் மற்றும் சட்டத்தைக் கொண்டு மறைக்கும் முயற்சி இது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித்தொடர்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கவிருப்பதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 

'காஸாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளுக்கு ஒளிந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மட்டுமே இந்த போருக்கு முழு பொறுப்பு' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வரும் ஜனவரி 11 மற்றும் 12-ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் இதுவரை 22,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.