வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

News image
Updated On :11 ஏப்ரல் 2025, 10:15 pm

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் 15 போ் உயிரிழந்தனா். இத்துடன், அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,912 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,15,891 போ் காயமடைந்துள்ளனா் என்று அமைச்சகம் தெரிவித்தது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.