போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.
வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப்.21-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனிடையே, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்வு வழங்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.
போப் பிரான்சிஸுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்து வந்ததாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபராக முதன்முறையாக டிரம்ப் பதவியேற்றபோது, குடியேற்றத்தைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் ஒரு தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப்பின் இந்தக் கூற்றைக் குறிப்பிட்டு, `டிரம்ப் கிறிஸ்தவர் அல்ல’ என்று போப் கூறினார். போப்பின் இந்தக் கருத்துகள் அவமானகரமானது என்று டிரம்ப் பதிலளித்தார்.
இவ்வாறான பிரச்னைகள்தான், டிரம்ப்புக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டதற்கு காரணம் என்று சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதன் பின்னணி காரணம் பிரெஞ்சு மொழியின் நெறிமுறை அல்லது கலாசாரம் எனலாம்.

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி - AP
வாடிகனில் இருக்கைகளின் ஏற்பாடு, பிரெஞ்சு மொழியின் அகரவரிசைப்படி மேற்கொள்ளப்படும். பிரெஞ்சு மொழியில், அமெரிக்கா ’Etats Unis’ என்று உச்சரிக்கப்படுகிறது. இதன் முதலெழுத்து ‘E' என்றுள்ளதால், அதற்கேற்ற அமர்வு வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, அகரவரிசைப்படி பார்க்கையில் 130 நாடுகளுக்கு முன்னதாக உள்ள வரிசையில்தான் டிரம்ப் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னிரண்டு வரிசையில் ஆர்ஜென்டீனா அதிபரும், இத்தாலி பிரதமரும் அமர்வர்.
போப் பிரான்சிஸின் பிறந்த நாடான ஆர்ஜெண்டீனாவின் அதிபர்தான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். 2023 ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸ் பதவியேற்றபோது, அவரை அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1929 ஆம் ஆண்டில், வாடிகனை இறையாண்மை கொண்ட நாடாக இத்தாலி அங்கீகரித்தது. இதன் காரணமாக, இத்தாலிக்கு இரண்டாவது வரிசை. இந்த வரிசையில் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி அமர்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
நரகக்குழி குறித்த கருத்து: டிரம்ப்புக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

ஒட்டுமொத்த ஈரானுக்கும் அழிவு: டிரம்ப் இறுதி எச்சரிக்கை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


