நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில், ஏப்.30 அதிகாலை 1 மணியளவில் (இந்திய நேரப்படி ஏப்.29, மாலை 6.30 மணியளவில்) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் அங்கு லேசான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்வாய்ப்பாக மிகப் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுகுறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 லட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்து நாடானது பசிபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆஃப் ஃபையர்’ எனும் மிகப் பெரியளவிலான டெக்டானிக் பாறைகளின் பிளவுகளின் மீது அமைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



