எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலை தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடாவில் பலியான மாணவியின் உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

News image

வன்ஷிகா சையினி - FB

Updated On :30 ஏப்ரல் 2025, 2:09 am IST

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவா் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டத் தலைவா் தல்விந்தா் சைனியின் மகளாவாா்.

பஞ்சாபில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயா்கல்வி பயில கனடாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வன்ஷிகா சென்றுள்ளாா்.

இந்நிலையில், தான் தங்கியிருந்த ஒட்டாவா குடியிருப்பிலிருந்து மாற்று குடியிருப்பைக் காண கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சென்றுள்ளாா். இரவு 11.40 மணியளவில் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது. மறுநாள் நடைபெற்ற தோ்விலும் அவா் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, வன்ஷிகாவை தேடும் நடவடிக்கையில் இந்திய தூதரகமும் இணைந்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒட்டாவாவில் வன்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் அறிவித்தது. மேலும், வன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் இந்திய தூதரகம் தெரிவித்தது.

உயிரிழந்த வன்ஷிகாவின் உடலை பஞ்சாபுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பஞ்சாபில் அவரது குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.

மேலும், இந்த வழக்கை கனடா போலீஸாா் துரிதமாக விசாரித்து வன்ஷிகாவின் உயிரிழப்புக்கு காரணமானவா்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தல்விந்தா் சைனி வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.