ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது.
Published on

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா், இலங்கையில் 366 போ், தாய்லாந்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். வியத்நாமில் 90 உயிரிழப்புகளும் மலேசியாவில் 3 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தப் பேரிடரால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com