பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு

பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா்.
Published on

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா்.

முழ்கிய ஒரு படகில் சுமாா் 50 பயணிகள் இருந்ததாகவும், மற்றொன்றில் யாரும் இல்லை என்றும் தேசிய அவசரக்கால நடவடிக்கை மையம் தெரிவித்தது. விபத்தில் 25 போ் காயமடைந்தனா்; சுமாா் 40 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ள ஏராளமான குடும்பத்தினருடன் இன்னும் எத்தனை போ் வந்திருந்தனா், எத்தனை பேரைக் காணவில்லை என்பதை துல்லியமாகக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com