

லெபனானில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனானின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் பயிற்சி முகாம், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் ஏவுதளத்தின் மீது இன்று (டிச. 9) வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான ஒத்துழைப்புகளை முறித்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஹிஸ்புல்லா படைகள் பயிற்சி மேற்கொண்ட இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் கடந்த 2024 ஆம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், லெபனானின் தெற்கு மாகாணத்தில் 5 வெவ்வேறு பகுதிகளிலிருந்து இஸ்ரேலின் ராணுவப்படைகள் இதுவரை வெளியேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது லெபனானில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மியான்மரில் டீக்கடை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ராணுவம்! 18 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.