

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது பிடிஐ(பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சிக்கும் அரசியலில் தடை விதித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முதன்மைக் குற்ரச்சாட்டு சுமத்தப்பட்டு ஊழல் வழக்குகளில் அவர் சிறையிலடைகப்பட்டுள்ளார். இந்த நிலையில், ‘எதிரி நாட்டின் கருவி’ என்று இம்ரான் கானையும் அவரது கட்சியையும் விமர்சித்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக பஞ்சாப் பேரவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 9) நிறைவேற்றப்பட்டது.
பேரவையில் ஆளுங்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை பிடிஐ கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் இம்ரான் கான், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த நிலையில், இந்தியாவைப் போன்ற 5 மடங்கு வலிமையான எதிரியைக்கூட வெற்றிகரமாக எதிர்கொண்ட ராணுவம் உள்பட நாட்டின் அரசு நிறுவனங்களை பாதுகாப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.