

மனித உரிமைகளுக்காகப் போராடும் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், சமூக ஊடகவியலாளர்கள் இணையதள வன்முறை, அதாவது ஆன்லைனில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக ஐ.நா. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருப்பதாக இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட தலைமை ஆராய்ச்சியாளரான ஜூலி போசெட்டி குறிப்பிடும்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில், பெண் பத்திரிகையாளர்களைக் குறிவைத்து, நவீன தொழில்நுட்பமான ‘டீப் ஃபேக்’ உள்ளிட்ட மென்பொருள்களின் உதவியுடன் அவர்களது படங்களை தவறாகச் சித்திரித்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.