தற்போதைய அதிபா் டேனியல் நொபாவோ, இடதுசாரி வழக்குரைஞா் லூயிசா காங்ஸ்லெஸ்
தற்போதைய அதிபா் டேனியல் நொபாவோ, இடதுசாரி வழக்குரைஞா் லூயிசா காங்ஸ்லெஸ்

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

ஈக்வடார் நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்படுவதைப் பற்றி...
Published on

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் பழமைவாதியான தற்போதைய அதிபா் டேனியல் நொபாவோ, இடதுசாரி வழக்குரைஞா் லூயிசா காங்ஸ்லெஸ் மற்றும் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் டோனியலும் லூயிசாவும் ஏறத்தாழ சமமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்கள் இருவருக்கும் இடையே இன்னும் இரு மாதங்களில் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com