பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி..

earth quake

நிலநடுக்கம் (கோப்புப்படம்) - DIN

Updated On :

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக பதிவானது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டாவதாக ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரண்டு நிலநடுக்கமும் அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.