ஆப்பிள் நிறுவனத்தில் மோசடி! இந்தியர்களும் பணிநீக்கம்!

நன்கொடை வழங்குவதில் மோசடி
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் தொண்டு செய்தால், அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆப்பிள் பணியாளர் நன்கொடை அளித்தால், அதன் ரசீதைக் காட்டி, அந்த நன்கொடை தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், நன்கொடை தொகைக்கு வரி விலக்கும் உண்டு.

இந்த நிலையில், அங்கு பணிபுரியும் சிலர், தங்கள் சொந்த தொண்டு நிறுவனத்துக்கே நன்கொடை அளித்து, அதன் ரசீதைக் காட்டி, நிறுவனத்திடம் இருந்து நன்கொடை தொகையையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் அளிக்கும் நன்கொடையும் அவர்களுக்கே கிடைக்கும்; நிறுவனம் சார்பாகவும் நன்கொடை கிடைக்கும்.

இதற்கிடையே, நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் திடீரென நன்கொடை அளித்து வருவதால், ஆப்பிள் நிறுவனத்துக்கு சந்தேகம் துளிர்விட்டது. இதனைத் தொடர்ந்து, நன்கொடை அளிப்பவர்கள் குறித்தும், அவர்கள் நன்கொடை அளிக்கும் தொண்டு அமைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில், நன்கொடை அளிப்பவர்களின் சொந்த தொண்டு அமைப்புகளுக்கே பணம் செலுத்தப்படுவது தெரிய வந்தது.

இவ்வாறான மோசடி மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 1.52 லட்சம் டாலர் (ரூ. 1.30 கோடி) மோசடி செய்த 6 பேர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வகையான மோசடியில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்தும் அதிரடியான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுதவிர, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் இருப்பினும், அவர்களில் பெரும்பாலும் தெலுங்கர்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X