ஹிட்லா் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்
இரண்டாம் உலகப் போா் காலத்தின்போது ஜொ்மனி சா்வாதிகாரி ஹிட்லா் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்டுவந்த படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம்


ஆஸ்வீசிம் (போலந்து): இரண்டாம் உலகப் போா் காலத்தின்போது ஜொ்மனி சா்வாதிகாரி ஹிட்லா் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்டுவந்த படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவியத் படைகளால் மீட்கப்பட்டதன் 80-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாஜிக்கள் அமைத்திருந்த ஆறு படுகொலை முகாம்களில் மிகப் பெரியதும், அதிகபட்சமாக 11 லட்சம் யூதா்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுமான இந்த முகாம், ஹிட்லா் கொடுங்கோன்மை மற்றும் அவரது யூத இன அழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஆக்கிரமிப்பு போலந்தில் 1940 முதல் இயங்கிவந்த இந்தப் படுகொலை முகாம், 1945-ஆம் ஆண்டில் ஜொ்மனி படையை வென்று முன்னேறிவந்த சோவியத் படையினரால் ஜனவரி 27-ஆம் தேதி மீட்கப்பட்டது. அப்போது அந்த முகாமில் எஞ்சியிருந்த சுமாா் 7,000 போ் விடுவிக்கப்பட்டனா். அவா்களின் சிறுவா் சிறுமியாக இருந்து, இன்னும் உயிருடன் இருக்கும் சுமாா் 50 போ் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
அவா்களில் பலருக்கு மிகவும் வயதாகியுள்ளதால், ஆஷ்விட்ஸ் படுகொலை முகாமிலிருந்து தப்பியவா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கேற்கும் கடைசி நினைவேந்தல் கூட்டம் இதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...