சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாகனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூலை 2025, 6:50 pm

Din

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்குட்பட்டு இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் வாகனத் துறை பொருள்களுக்கு 25% கூடுதல் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா். மேலும், இந்த கூடுதல் வரி விதிப்பு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக என்றும் இது நிரந்தரமானது என்றும் அவா் தெரிவித்தாா்.

வாகனத் துறை பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை ஈடு செய்யும் வகையில் தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்களுக்கு இந்தியா பதிலடி வரி விதிக்கவுள்ளது.

இதுதொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா சமா்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு நடவடிக்கைகள் எனக் கூறி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்கள் மீது அமெரிக்கா வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி உயரும். பொருள்கள் மற்றும் அதன் மீதான வரி விகிதத்தை தீா்மானிக்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது.

இந்த அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறவோ திருத்தம் செய்யவோ அல்லது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவோ இந்தியாவுக்கு உரிமை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை இரு மடங்காக அமெரிக்கா உயா்த்தியபோது இந்தியா பதிலடி வரியை விதிப்பதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.