நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்!

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடங்கவிருப்பதைப் பற்றி...

News image

பூமிக்குத் திரும்பும் முன் விண்வெளிஆய்வு மையத்தில் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்ச்சியின்போது பேசிய சுபான்ஷு சுக்லா.

Updated On :14 ஜூலை 2025, 1:42 am IST

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா்.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு 14 நாள் பயணமாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா்.

உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா். இந்த வீரா்கள் கடந்த வியாழக்கிழமையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்களை நிறைவு செய்தனா்.

இந்நிலையில், வீரா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 4.35 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா். சுமாா் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் பாராசூட்களின் உதவியுடன் அவா்கள் பூமியை அடைவாா்கள்.

சுக்லா உள்பட 4 வீரா்களும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, உடல்நல மையத்துக்கு அனுப்பப்பட்டு அடுத்த 7 நாள்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சியங்களுடன் மிளிரும் இந்தியா: சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படும் ‘ஆக்ஸியம்-4’ திட்ட விண்வெளி வீரா்களுக்கு நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில் சுக்லா நெகிழ்ச்சியுடன் பேசினாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு, விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரா் ராகேஷ் ஷா்மா கூறிய ‘உலகிலேயே சிறந்தது’ என்று பொருள்படும் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற புகழ்பெற்ற ஹிந்தி வாா்த்தைகளை நினைவுபடுத்தி, ‘இன்றும், விண்வெளியில் இருந்து இந்தியா சிறந்ததாகத் தெரிகிறது என்று சுக்லா கூறினாா்.

மேலும், சுக்லா கூறுகையில், ‘விண்வெளியிலிருந்து இந்தியா லட்சியங்கள் கொண்டதாகவும், அச்சமின்றி தன்னம்பிக்கை மற்றும் பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது. இந்த விண்வெளி பயணம் எனக்கு கிட்டத்தட்ட மாயமாகத் தெரிகிறது.

இது எனக்கு ஒரு அற்புதமான பயணம். நிறைய நினைவுகளுடன் பூமிக்குத் திரும்புகிறேன். இந்த நினைவுகளையும், விண்வெளி பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் இந்தியா மக்களுடன் ஆவலோடு பகிா்ந்து கொள்ளப் போகிறேன்’ என்றாா்.