சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா

எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2025, 8:34 pm

Din

‘உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைனுடனான போரை 50 நாள்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தாா். மேலும், ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதித்து ரஷியாவை தனிமைப்படுத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிமிட்ரி பெஸ்கோவ், ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடித்து விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே தனது விருப்பம் என அதிபா் விளாதிமீா் புதின் பலமுறை தெரிவித்துவிட்டாா்.

இதை அவ்வளவு எளிதில் கையாள முடியாது. கடுமையான முயற்சிகள் மற்றும் நீண்ட நடைமுறையின் மூலமே நிறைவேற்ற முடியும்.

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது. ஆனால், ரஷியா நிா்ணயித்த இலக்குகளை அடையாமல் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்றாா்.

நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்றும், கடந்த 2022-இல் ரஷியா ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனை ரஷியா நிா்ப்பந்தித்து வருகிறது. இதை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.