
பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.
பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங்களாக பல்வேறு நோய்களுடன் போராடி வந்தார். அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து அவரது குடும்பத்தினர் எந்தத் தகவலும் உறுதிபடுத்தவில்லை.
ஜான் மைக்கேல் மரணமடைந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார். இது வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத அளவுக்கு சோகமானது.
அவர் எங்களது குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். இந்த சோகமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
‘பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின்’ முன்னணி பாடகரான ஓஸி ஆஸ்போர்ன், அவரது குழுவில் அவரின் குரல் மிகவும் பிரபலமானதாக மாறியது. இவரது குரலில் அயர்ன்மேன், பாரனாய்டு, வார் பிக் போன்ற டிராக்குகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
20 ஆண்டுகளாக இசையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜான் மைக்கேல், மூன்று வாரங்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வமாக இசைக்குழுவில் இருந்து விலகினார். மீண்டும் ஜூலை 5 ஆம் தேதி இசைக்குழுவினருடன் இணைந்தார். அவருக்கு பிளாக் சப்பாத் சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
யுகே மியூசிக் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் யுஎஸ் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் இரண்டிலும் இரண்டு முறை கௌரவிக்கப்பட்டார் ஓஸி. அதனைத் தொடர்ந்து ஓஸியின் திறமைக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன.
அவற்றில் ஐவர் நோவெல்லோ விருது, 5 கிராமி விருதுகள், காட்லைக் ஜீனியஸ் விருது, கிளாசிக் ராக்கின் லிவிங் லெஜண்ட் பரிசு போன்றவைகளாகும். அதிலும், 12 முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அவருக்கு தெல்மா ரிலே, ஷரோன் என்ற இரு மனைவிகளும், ஐமி, கெல்லி, ஜாக், ஜெசிகா மற்றும் லூயிஸ் என்ற 5 குழந்தைகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.