கோப்புப் படம்
கோப்புப் படம்

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியாவில் 35 பிணைக் கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
Published on

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார்ச் மாதம் குற்றவாளிக் குழுக்கள், சுமார் 56 கிராமவாசிகளைக் கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 655 டாலர் (ரூ.57,000) அளவிலான பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் கேட்ட பணம் முழுவதும், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, கடத்தப்பட்ட 52 பிணைக் கைதிகளில் ஒரு சிறுவன், 17 பெண்கள் என 18 பேரைக் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.

ஆனால், மீதமுள்ள பிணைக் கைதிகள் சுமார் 38 பேரைக் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை செய்ததாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில், பிணைக் கைதிகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற காரணம் தெரியாத நிலையில், அதைக் கடத்தல்காரர்கள் மட்டுமே அறிவார்கள் என்று உள்ளூர் அரசின் தலைவர் மன்னிரு ஹைதரா கௌரா கூறியுள்ளார்.

தற்போது விடுதலைச் செய்யப்பட்டவர்களில், 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சூழலில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற குற்றங்களில் கொலைச் செய்யப்படும் பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்படுவது, இயலாத ஒன்று என நைஜீரியா அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

Summary

In Nigeria, kidnappers reportedly shot and killed around 35 hostages, despite being paid.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com