டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்காவில் பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் இடையே கருத்து மோதல் வைரலாகியிருக்கிறது.

News image

டிரம்ப் - எலான் மஸ்க்

Updated On :6 ஜூன் 2025, 1:07 pm IST

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் தற்போது பொது வெளியில் வெடித்துள்ளது.

2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டதோடு, அக்கட்சிக்கு நன்கொடையாளராகவும் இருந்தார் எலான் மஸ்க்.

தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், அதற்கு கைம்மாறாக, அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை உருவாக்கி அதற்கு மஸ்க்கை தலைவராக்கி அழகுபார்த்தார்.

அதன்பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை உலகமே அறிந்திருந்தது.

அமெரிக்காவில், தொழிலதிபர் எலான் மஸ்க், அதிபர் டொனால்ட் டிரம்ப், இடையே இருந்த ஒரே லட்சியம் அவர்களிடையே நட்பை ஏற்படுத்தி, நவநாகரீக அமெரிக்க வரலாற்றில், மிகவும் விநோதமான, அரசியல் கூட்டணியாக மாறி, பிறகு கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு முடிவுக்கு வந்து, இன்று பொது வெளியில் சண்டையிடும் அளவுக்கு முற்றிவிட்டது.

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த பிரச்னை தொடங்கியது. அமெரிக்க நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகினார்.

அண்மையில், எலான் மஸ்க் குறித்து டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவின் பட்ஜெட்டில் பல பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவதற்கான எளிதாக வழி உள்ளது, எலான் நிறுவனத்துக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறுத்துவதுதான். ஏற்கனவே இருந்த பைடன் அரசே இதைச் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு எலான் மஸ்க் சும்மா இருப்பாரா, என்ன? எனது அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அதிபர் கூறியிருக்கிறார். இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் டிராகன் விண்கலத் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும் என்று பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, நல்ல அட்வைஸ்தான். சரி நாங்கள் டிராகனை நிறுத்தவில்லை என்று பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க்.

இன்னும் இந்தப் பிரச்னை தீரவில்லை. அடுத்தடுத்து எக்ஸ் பதிவுகள் மூலம், டொனால்ட் டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார் எலான் மஸ்க். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டஜெஃப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் டிரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக நேரடியாக குற்றம்சாட்டியபோது நிலைமை மிகவும் மோசமடைந்தது.

எப்ஸ்டைன் ஆவணங்களில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருந்தது. அதனால்தான் அது பொது வெளியில் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் எலான் மஸ்க்.

இதனை வெள்ளை மாளிகை, மிக துரதிருஷ்டவசமான சம்பவம் என்று விமர்சித்திருக்கிறது. ஏற்கனவே, பாலியல் குற்றவாளி எப்ஸ்டைனை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் கொண்டு வந்திருக்கும் புதிய வரி மசோதாவால், நாட்டில், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்படும் என்றும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். தொடர்ந்து, கருத்து மோதல் வெடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.