மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

News image
இம்ரான் கான்- கோப்புப்படம்
Updated On :8 ஜூன் 2025, 7:23 pm

Din

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு வழக்குகளை எதிா்கொண்டு வரும் இம்ரான் கான், கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுக்களை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க இருக்கிறது. அந்நாளில் இம்ரான் கானுக்கு நிச்சயமாக ஜாமீன் கிடைக்கும் என்று பிடிஐ கட்சித் தலைவா் கோஹா் அலி கான் நம்பிக்கை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் புதன்கிழமை விசாரணை இம்ரான் கான் விடுதலைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை எதிா்க்கட்சிகளுடன் இணைந்து பிடிஐ விரைவில் தொடங்கும்.

நாட்டுக்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் எதிா்க்கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும். எதிா்வரும் பட்ஜெட்டிற்கான எங்கள் வியூகத்தையும் இறுதி செய்துள்ளோம். இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்திக்கிறோம்’ என்றாா்.