காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.

News image

அப்துல் ஹமீது

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2025, 9:04 pm

DIN

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசினாவின் ஆட்சிக் காலத்தின்போது இரண்டு முறை அதிபராக இருந்தவா் அப்துல் ஹமீது (81). அவருக்கு எதிராக கொலை வழக்கு உள்ள நிலையில் அவா் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், கடந்த மே 8-இல் அவா் தாய்லாந்துக்குச் சென்ற விவரம் பின்னா்தான் தெரியவந்தது. அதையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இரு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சுங்கத் துறை அதிகாரி ஒருவா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அவா் பிரதம் ஆலோ விமான நிலையத்தை திங்கள்கிழமை அடைந்ததாகவும், அப்போது, அவரது மகன் மற்றும் சகோதரா் உடன் இருந்தனா் என்றும் டாக்கா ட்ரிபியூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.