அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமூடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ்: முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களைப் பற்றி...

News image

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்...

Updated On :11 ஜூன் 2025, 9:14 am IST

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வந்து வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்களை தாக்கிய பலர் கைது செய்யப்பட்டனா்.

குழப்பத்திற்கு மத்தியில், முகமூடி அணிந்துவந்த அந்தக் கும்பல் ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்து ஜன்னல்களை உடைத்தும், கண்ணாடி சுவர்களில் ‘லூட்டர்கள்’(திருடர்கள்) என கிராஃபிட்டிகளையும் வரைந்தனர்.

இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், முகமுடியை அணிந்துகொண்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து சரமாரியாக அடித்து உடைத்தது மட்டுமின்றி, விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள், டேப்-லட்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர்.

போராட்டக் களத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட விடியோவில், ஆப்பிள் ஸ்டோர் மட்டும் அல்லாமல், அடிடாஸ் ஷோரூம், மருந்தகங்கள், நகைக் கடைகளையும் அவர்கள் சேதப்படுத்துவது பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்பிள் ஸ்டோர் சூறையாடப்பட்ட விவகாரத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.