யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூன் 2025, 10:10 pm

Din

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கடுமையாகக் கண்டித்தாா். இத்தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் ஈரானுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை அளிக்கிறது. சகோதர மக்களான ஈரானியா்கள் இஸ்ரேலின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, ஈரானுக்கு தற்காப்புக்கான உரிமை உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானியா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.நா. பாதுகாப்பு சபை உள்பட அனைத்து சா்வதேச அமைப்புகளில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். ஐ.நா.வும், சா்வதேச சமூகமும் இஸ்ரேலின் இந்த அத்துமீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கடினமான நேரத்தில் ஈரானுக்கு பாகிஸ்தான் உறுதியாக துணைநிற்கிறது என்று கூறியுள்ளாா். இத்தகவலை ஷெரீஃப் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.