தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 6 பெட்டிகள் தடம் புரண்டன.

News image

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. - ENS

Updated On :18 ஜூன் 2025, 9:31 pm IST

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன.

பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 18) சென்று கொண்டிருந்தது. ஜகோபாபாத் பகுதியில் கால்நடை சந்தைக்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால், ரயில் பாதையில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 6 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதமடைந்து, ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில், ரயிலின் பயணிகள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த வழியில் தற்போது ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதுடன், தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிந்து மாகாணத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது 2 - வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று பலூசிஸ்தான் தீவிரவாதிகளால் இந்த ரயிலானது கடத்தப்பட்டது.

பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, ரயிலும் அதன் பயணிகளும் மீட்கப்பட்டனர். ஆனால், 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.