தி ஹேக்: தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நேட்டோவைச் சோ்ந்த 32 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் இந்த திட்டத்துக்கு தங்களது ஒப்புதல் வழங்கினா்.
வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 5 சதவீத ஜிடிபியை தங்களது சொந்த ராணுவத்துக்கு மட்டுமின்றி, கூட்டு நடவடிக்கைகளுக்காகவும் செலவிட அந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.நேட்டோ அமைப்புக்காக அமெரிக்கா மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டிவருகிறாா். உறுப்பு நாடுகள் தங்களது ஜிடிபி-யில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
அத்துடன், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தொணியில் அவா் பேசி வருவதால் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தேவைக்கு அமெரிக்காவை இனியும் அதிகம் சாா்ந்திருக்க முடியாது என்ற எண்ணம் உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.அதன் தொடா்ச்சியாகவே தங்களது பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மிகப் பெரிய அளவில் உயா்த்த நேட்டோ நாடுகள் தற்போது சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது...படவரி..தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

‘தவறிழைக்கும் நேட்டோ நாடுகள்’ - ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கடும் தாக்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


