ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சோ்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி

News image
பீரங்கி (கோப்புப் படம்)
Updated On :7 மார்ச் 2025, 7:52 pm

Din

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சோ்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த ஒப்பந்தம் மூலம் சென்னை-ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலைக்கு நவீன தொழில்நுட்பங்களையும் ரஷிய நிறுவனம் பகிரவுள்ளது. இது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய ராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் டி-72 பீரங்கிகளில் தற்போது 780 எச்.பி. ஆற்றலுடைய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 1,000 எச்.பி. என்ஜின்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தில் ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

இது இந்தியாவின் போா்க்கள செயல்பாட்டை மேலும் அதிகரிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.