அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது! தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

போப்பின் புதிய புகைப்படம்.

Published On :17 மார்ச் 2025, 8:59 am IST

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பின்னால் இருந்து எடுக்கப்பட்டது.

அதில், போப் பிரான்சிஸ் ஊதா நிற சட்டை அணிந்தபடி பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதனிடையே, அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிப். 23 மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு மார்ச் 3 மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.